Tuesday, October 21, 2014

Darwin’s Armada - புத்தக விமர்சனம் - ஒலிக்கோப்பு
புத்தக விமரிசனம் - வார சந்திப்பு

ஒவ்வொரு புதன் மாலை 6.30 க்கு தியாகராய நகர், தக்கர் பாபா பள்ளியில்,
புத்தக விமரிசன சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த வாரம்

அக்டோபர் 8  2014
புத்தகம் - Darwin's Armada: Four Voyages and the Battle for the Theory of Evolution by     Iain McCalman

நூல் விமர்சகர் - திரு. கோபு

தொடர்புக்கு - saravanan kanchee <kancheesaravanan@gmail.com>
சரவணன்

காந்தி பயிலகம்

============

இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப் பட்டது.

https://archive.org/details/BookReviewByGopuDarwinsArmada
உரை பற்றிய பேச்சாளரின் வலைப்பதிவு ;

http://varahamihiragopu.blogspot.in/2014/10/blog-post.html
உரையைக் கேட்ட திருமதி . ராதிகா பார்த்தசாரதி அவர்களின் குறிப்பு

https://www.facebook.com/notes/963755006982248/


====

நான் இந்த அனுபவத்தை பற்றி நேற்றே எழுதிருக்கவேண்டியது. எதோ வேலைகளால் தள்ளிப் போய் விட்டது.

முந்தாநாள் புதன் கிழமை மத்யானம் ஃபேஸ் புக்கில் வழக்கம் போல மேய்ந்து கொண்டிருக்கும் போது, நண்பர் ராஜகோபாலன் வெங்கட்ராமன் அன்று மாலை நடக்கவிருக்கும் புக் ரெவ்யு கூட்டம் பற்றி எழுதியிருந்தது என் கவனத்தை ஈர்த்தது.

மாலை 6.45 மணிக்கு ரங்கரத்னம் கோபு என்பவர் தக்கர் பாபா பள்ளியில் Darwin’s Armada என்னும் புத்தகத்தை பற்றி ரெவ்யு மீட்டிங்கில் பேசுகிறார் என்று எழுதியிருந்தார். நான் இந்த மாதிரி நூல் விமர்சன / மதிப்புரை கூட்டங்களுக்கெல்லாம் அதிகம் போனதில்லை. ஆனால் அவர் எழுதியிருந்த,” It is about the voyages of discovery by four biologists -Charles Darwin, Joseph Hooker, Thomas Huxley and Alfred Russell Wallace in the19th century.” என்ற வாக்கியம் என்னைக் கவர்ந்தது. இவர்கள் நால்வரும் பயாலஜி துறையில் புகழ் பெற்ற விஞ்ஞானிகள். உயிரியல் பாடத்தில் பரிணாம வளர்ச்சி (Evolution), மற்றும் தொகுப்பு முறையியல் (Taxonomy) போன்றவற்றில் கடவுள் போன்று போற்றப்படுபவர்கள். என் துறை என்பதால் உடனே ஆர்வியிடம் விசாரித்து விட்டு கிளம்பி விட்டேன்.

தக்கர் பாபா பள்ளியில் அரை இருட்டில் தட்டுத் தடுமாறி கூட்டம் நடக்கும் அறையை விசாரித்து அடையும் போது, நல்லவேளை அது ஆரம்பிக்க வில்லை. மொத்தமே அறையில் இருபது அல்லது இருபத்துஐந்து பேர் இருந்தார்கள். ரங்கரத்னம் கோபுவிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன். சரியாக சொன்ன நேரத்திற்கு ஆரம்பித்தார்.

மடை திறந்தாற் போல மணிப் ப்ராவாளமான பேச்சு, எதையும் எளிதில் விளக்கும் லாகவம், தான் ரசித்துப் படித்தவற்றை பிறரும் ரசிக்குமாறு சொல்லும் திறமை, ஆழ்ந்த அறிவுச் செழுமை, இதுதான் கோபு. அங்கிருந்த ஒன்னேகால் மணி நேரமும் பிரமித்து போய் அமர்ந்திருந்தேன்.ஐயன் மெக்கல்மான் எழுதிய Darwin's Armada என்ற புத்தகம், சார்லஸ் டார்வின், ஜோசஃப் டால்டன் ஹூக்கர், தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி மற்றும் ஆல்ஃபிரட் ரஸ்ஸல் வாலஸ் ஆகியோர் விஞ்ஞான கண்டுபிடிப்புக்களுக்காக தனித்தனியே மேற் கொண்ட கப்பல் பயணங்கள் பற்றியது. இவையெல்லாம் பத்தொன்பாதாம் நூற்றாண்டில் நடந்தவை.

அக்காலத்தில் பாய்மரக் கப்பல்கள் தான். அவர்கள் போன இடங்களோ ஆள் அரவமற்ற தனிமை இடங்கள் /தீவுகள் / கண்டங்கள் அல்லது நாகரீகம் அறியாத ஆதிக் குடிகள் வசிக்கும் பகுதிகள். அவர்களோ நாகரீகத்தின் கலங்கரை விளக்காக தங்களைக் கருதிக் கொள்ளும் ஆங்கிலேயர்கள். சொந்தநாட்டின் வசதிகளை துறந்து அவர்கள் வருடக் கணக்காக இப்பிரயாணங்களை மேற்கொள்ள தூண்டியது எது என்ற கேள்வி எல்லாருக்கும் எழும். அறிவியற் கண்டுபிடிப்புகள், மற்றும் பிரயாணம் மீது கொண்ட காதல்தான் இதற்கு காரணிகளாக இருந்திருக்க வேண்டும்.

டார்வின் செல்வக் குடும்பத்தில் பிறந்தாலும், ஹம்போல்ட் என்ற ஜெர்மன்காரர் எழுதிய பயண நூல் தாக்கத்தினால் எப்படி பீகிள் கப்பலின் தென்னமெரிக்கப் பயணத்தில் சேர்ந்தார், கப்பலின் காப்டன் ஃபிட்ஸ்ராய்க்கு சகபாடியாய் சேர்ந்தாலும் எவ்வாறு கப்பலின் உயிரியல் ஆராய்ச்சியாளராய் மாறினார், புவியியலில் அவர் கொண்ட ஆர்வம், மற்றும் அவரின் விரிவான குறிப்பெடுக்கும் திறமை, தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா பிரயாணம் முடிந்து,  இங்கிலாந்து திரும்பி இருபதாண்டு கழித்து, நண்பர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு தன் புகழ் பெற்ற பரிணாம கோட்பாட்டை வெளிட்டது, அவருக்கும், ஆல்ஃபிரெட் ரஸ்ஸல் வாலஸ்ஸுக்கும் உள்ள நாகரீகமான நட்புறவு பற்றியெல்லாம் புத்தகத்திலிருந்து கோபு எடுத்து பேசியது மிக மிக ஸ்வாரஸ்யம். பயாலஜி தெரியாதவர்கள் கூட மிகவும் ரசித்திருப்பார்கள்.

அடுத்தாற்போல ஹூக்கரை பற்றிய விவரங்களை சுவை பட கூறினார். எப்படி அவர் காப்டன் ஜேம்ஸ் ராஸின் கப்பலில் அன்டார்டிகா, கெர்கூலன் தீவு, மற்றும் ஆஸ்திரேலியா சென்று, உயிரினங்கள் சேகரித்து புகழ் பெற்ற taxonomist ஆக ஆனார் என்பது மற்றொரு கதை. 

புத்தகம் பேசும் மற்ற இருவரான தாமஸ் ஹக்ஸ்லி  மற்றும் ஆல்ஃபிரெட் ரஸ்ஸல் வாலஸ் இருவரையும் பற்றிப் பேச அன்றைக்கு கோபுவிற்கு நேரம் போதவில்லை. ஆகையால் இந்த புத்தகத்தின் இரண்டாவது ரெவ்யு கூட்டம் நடத்துமாறு வேண்டுகோள் வைத்திருக்கிறோம். காந்தி ஸ்டடி செண்டர் நடத்துபவர்கள் மனது வைக்க வேண்டும்.

கோபுவின் இந்த புத்தக ரெவ்யு பற்றி கேட்டவுடன் இதைப் படிக்க தீர்மானித்து விட்டேன். ஆர்டர் செய்யவேண்டும்.. படிக்க வேண்டிய புததகங்களின் லிஸ்ட் நீளமாகி கொண்டே போகிறது.

ஆர்வி, கோபுவைப் பற்றி, multifaceted, versatile, polymath and polyglot என்று குறிப்பிட்டார். அது ஒன்றும் மிகையேயில்லை. ரங்கரத்னம் கோபு, உங்களின் அடுத்த மீட்டிங் எப்பொழுது..?    
==========

Friday, October 17, 2014

பாகிஸ்தானுக்கு போகும் ரயில் - புத்தக விமர்சனம் - ஒலிக்கோப்பு
==========
புத்தக விமரிசனம் - வார சந்திப்பு

ஒவ்வொரு புதன் மாலை 6.30 க்கு தியாகராய நகர், தக்கர் பாபா பள்ளியில்,
புத்தக விமரிசன சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த வாரம்

அக்டோபர் 15  2014
புத்தகம் - Train to Pakistan - Kushwanth Singh

நூல் விமர்சகர் - திரு. சு. சிவலிங்கம்

தொடர்புக்கு - saravanan kanchee
சரவணன் - 9790740886

காந்தி பயிலகம்


=========

இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப் பட்டது.


https://archive.org/details/TrainToPakistanBookReviewInTamilBySivalingam

Monday, December 9, 2013

கடன் அட்டை பற்றிய விவாதம்

தமிழ் பதிப்புலகம்

கேணி சந்திப்பு: பத்ரி சே ஷாத்ரி, தமிழ் பதிப்புலகம் பற்றிப் பேசியது.

நாள் : 2013-12-08

https://archive.org/details/20131208KeniMeetingBadriSeshadrihttps://archive.org/download/20131208KeniMeetingBadriSeshadri/2013_12_08_Keni_Meeting_Badri_Seshadri.ogg

https://archive.org/download/20131208KeniMeetingBadriSeshadri/2013_12_08_Keni_Meeting_Badri_Seshadri.mp3